இருசக்கர உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் தீ விபத்து: 15 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம் - தீயணைப்பு துறையினர்
🎬 Watch Now: Feature Video

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம், மெயின் ரோட்டில் உள்ள அம்மன் ஆட்டோ மொபைல்ஸ் கடையில் அதிகாலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர், சங்கராபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதற்குள் தீ மளமளவென எரிந்ததால் கடையில் இருந்த 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின. மேலும் இச்சம்பவம் குறித்து சங்கராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.