கரும்பு கட்டுகளை ஏற்றி சென்ற லாரியை வழிமறித்த யானை - கரும்பை சுவைத்த வீடியோ... - கரும்பு ஏற்றி சென்ற லாரியை வழிமறித்த யானை
🎬 Watch Now: Feature Video
ஈரோடு: தாளவாடியில் இருந்து இன்று (ஜூன்25) கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் சென்று கொண்டிருந்தது.அப்போது காரப்பள்ளம் சோதனைச் சாவடியில் யானை ஒன்று லாரியை வழிமறித்து நின்றது. அந்த யானை தானாகவே தும்பிக்கையால் கரும்பை பறித்தது. இதனை கண்ட ஓட்டுநர் சில கரும்பு கட்டுகளை யானைக்கு அளித்தார். அதை பெற்ற யானை, அவற்றை தூக்கிய படி ஓரமாக சென்று சாப்பிட்டது. இதனால், தமிழம்-கர்நாடக நெடுஞ்சாலையில் இடையே 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.