தொடர் மழையால் மரக்காணம் அருகே தரைப்பாலம் மூழ்கியது - 5 கிராமங்கள் பாதிப்பு! - continuous rain
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மரக்காணம் அடுத்த காணிமேடு பகுதியில் அமைந்துள்ள தரைப்பாலம் மூழ்கியது. சுற்றுவட்டார கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு புதிய பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு 9.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையிலும், பணிகள் தொடங்கப்படாமல் உள்ளன. மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை அலுவலர்கள் தரைப்பாலத்தைப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.