ETV Bharat / state

பறிமுதல் செய்யப்பட்ட பேருந்தை திருடி சென்ற மர்ம நபர்.. அதிர்ச்சியில் உறைந்த போக்குவரத்து அதிகாரிகள்..! - SEIZED BUS THEFT

குடியாத்தம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட தனியார் பேருந்தை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து திருடிச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மர்ம நபர் திருடி செல்லும் பேருந்து
மர்ம நபர் திருடி செல்லும் பேருந்து (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 26, 2024, 5:39 PM IST

வேலூர்: மாவட்டம் குடியாத்தம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலுக்கு இருமுடி அணிந்து ஏராளமான பக்தர்கள் தினந்தோறும் தனியார் பேருந்து மற்றும் மினி வேன் மூலம் சென்று வருகின்றனர். இதனிடையே ஆம்பூர் வாணியம்பாடி அணைக்கட்டு பகுதியில் ஒரு தனியார் பேருந்து இரு சக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு இயங்கி வருவதாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் குடியாத்தம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே நேற்று இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகன பதிவின் கொண்ட பேருந்து மோட்டார் வாகன ஆய்வாளர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருப்பதைக் கண்டு மாற்று பாதையில் செல்ல முயன்றுள்ளது.

அதனை அறிந்த மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் ஊழியர்கள் அந்த வாகனத்தை மடக்கி பிடித்து அந்தப் பேருந்தில் மேல்மருவத்தூர் கோவிலுக்கு சென்று வந்த பக்தர்களை இறக்கி அரசு பேருந்து மூலம் அனுப்பி வைத்து பின்னர் அந்த வாகனத்தை குடியாத்தம் மோட்டார் வாகன அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இதையும் படிங்க: யார் அந்த சார்..? எப்ஐஆரில் கூறப்பட்டிருப்பது என்ன..? அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் கிளம்பும் கேள்விகள்!

பின்னர் இருசக்கர வாகன பதிவெண் கொண்டு பேருந்தை இயக்கியதற்கு அபராதம் விதித்து அதனை ஆன்லைன் மூலம் செலுத்தும் படி கூறியுள்ளனர். இந்நிலையில் பறிமுதல் செய்த பேருந்தை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இரவு சுமார் 2 மணி அளவில் அந்த பேருந்தை மர்ம நபர் திருடிச் சென்றுள்ளார்.

இதனை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் குடியாத்தம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இது சம்பந்தமாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கூறுகையில், ''பொதுமக்கள் வீட்டு விசேஷங்கள் மற்றும் கோவிலுக்கு செல்லும்போது முன்பதிவு செய்யும் பேருந்து மற்றும் மினி பேருந்துகளை ஆப் மூலம் சோதனை செய்தா பிறகு வாகனங்களை முன் பதிவு செய்ய வேண்டும்'' என தெரிவிக்கின்றனர்.

பறிமுதல் செய்த இருசக்கர வாகன பதிவின் கொண்ட பேருந்தை மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் இருந்து திருடி சென்ற சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.