மரக்காணம் அருகே அழுகிய நிலையில் 20 டன் நீலத்திமிங்கலம்! - villupuram news
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்: உடல் அழுகிய நிலையில் கடற்கரையோரம் கிடந்த அரியவகை நீலத்திமிங்கலத்தின் உடலை, மரக்காணம் எக்கியார் குப்பம் மீனவர்கள் இன்று(ஜூன்.24) கண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீன்வளம், கால்நடை, வனம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் ஆய்வு செய்து, இறந்து கிடந்த நீலத்திமிங்கலம் சுமார் 50 அடி நீளமும், 20 டன் எடையும் கொண்டது என்றும், கடலூர் அருகே கடந்த 20ஆம் தேதி இறந்த இத்திமிங்கலம், காற்றின் திசை மாற்றத்தால் கரை ஒதுங்கியிருக்கலாம் என, தெரிவித்தனர்.