சூறாவளி காற்றுடன் கொட்டித் தீர்த்த மழை: சேதமடைந்த வாழை மரங்கள் - கனமழையால் வாழைமரம் சேதம்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (மே. 10) இரவு சூறாவளி காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஆங்காங்கே மின்கம்பங்கள் விழுந்தன. இந்நிலையில் வாணியம்பாடி அருகே நிம்மியம்பட்டு பகுதியில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் விவசாய நிலத்திலும் அதே பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் வாழை மரங்கள் சேதமடைந்தன. அறுவடைக்கு தயாராக இருந்த வாழை மரங்கள் திடீர் சூறைக்காற்றால் சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.