CCTV footage - சாலையைக் கடக்க முயன்ற பெண் மீது கார் மோதி விபத்து - கார் விபத்து சிசிடிவி காட்சி
🎬 Watch Now: Feature Video
பெங்களூரு: பல்லாரி சாலையில் சாலையைக் கடக்கும் இளம் பெண் மீது கார் மோதிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 17ஆம் தேதி அஸ்வினி என்ற இளம்பெண், அவசரமாக சாலையைக் கடக்க முயன்றார். அப்போது, கார் மோதியதில் டிவைடரில் விழுந்தார். காயமடைந்த அஸ்வினி ஹெப்பலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து ஆர்.டி.நகர் போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது, இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.