கிணற்றில் தவித்த சிறுத்தை; 3 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு
🎬 Watch Now: Feature Video
தேனி அருகே வாழையத்துபட்டி கிராமத்தில் மலையடிவாரத்தில் உள்ள கிணறு ஒன்றில் நேற்று (ஜூன்24) சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பாரத்தபோது, கிணற்றுக்குள் சிறுத்தை ஒன்று வெளியே வர முடியாமல் தவிப்பதை அப்பகுதியினர் கண்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற தேனி வனத்துறையினரும் தீயனைப்புத்துறையினரும் மிகப்பெரிய வலையை கிணற்றுக்குள் வீசி சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், சிறுத்தையை பத்திரமாக மீட்டனர். கிணற்றுக்குள் இருந்து மேலே வந்த சிறுத்தை பின்னர், காட்டுக்குள் தப்பி ஒடியது.