சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் 5 லட்சம் வண்ண மலர்கள்! - நீலகிரி
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: குன்னூர் சுற்றுலா தலங்களில் மிக முக்கியமான ஒன்றாக சிம்ஸ் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஜனவரி முதல் வாரத்தில் கோடை சீசனுக்கு சுமார் 5 லட்சம் வெளிநாட்டு மலர் நாற்றுகள் மற்றும் விதைகள் நடவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது பூங்காவில் உள்ள மலர்கள் அனைத்தும் பூக்க துவங்கியுள்ளது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் வந்து செல்லும் நிலையில், தற்போது கரோனா தொற்று காரணமாக சுற்றுலா பயணிகள் வர தடை உத்தரவு அமலில் உள்ளதால் பூங்கா பொலிவிழந்து காணப்படுகிறது.