புத்தகத்தால் உலக புத்தக தின விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள்! - காரைக்கால் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23ஆம் தேதி உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாகக் காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூர் திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளி நூலகர் ராஜலட்சுமி புத்தக விழாவினை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பள்ளி மைதானத்தில் 30×30 என்ற அளவில் 500 புத்தகங்கள் கொண்டு உலக புத்தக தினம் என்ற எழுத்து வடிவத்தை மாணவர்கள் உருவாக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தனர்.