கரோனா மையத்திற்குள் திரியும் நாய்கள்: புகார் காணொலி வெளியிட்ட பெண் - புகார் வீடியோ வெளியிட்ட பெண்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர் கொடிசியா வளாகம், கரோனா சிகிச்சையளிக்கும் பிரதான மையமாகச் செயல்பட்டுவருகிறது. அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் பெண் ஒருவர் இணையதளத்தில் புகார் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “உணவு சரிவர வழங்கப்படுவதில்லை, கழிப்பறைகள் தூய்மைப்படுத்துவது இல்லை, இரவு நேரங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க செவிலியர் இருப்பதில்லை, மையத்திற்குள் நாய்கள் சுற்றித் திரிகின்றன”எனக் கூறியுள்ளார். அந்தக் காணொலி சமூக வலைதளங்களில் தற்போது பரவிவருகிறது.