மழை நீரில் மிதக்கும் மவுலிவாக்கம்; பொதுமக்கள் சாலை மறியல் - மவுலிவாக்கம் சாலை மறியல்
🎬 Watch Now: Feature Video

சென்னை: மவுலிவாக்கம் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் அப்பகுதியினர் தங்களது உறவினர்கள் வீடுகளில் தங்கிவருகின்றனர். இந்தச் சூழ்நிலையிலும் சிலர் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்று (நவ. 30) மழை நீரை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் மவுலிவாக்கம் - மாங்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அங்கு சென்ற மாங்காடு காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தினர்.