100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு: கிராமிய நடனங்கள் ஆடி அசத்திய சிறுவர் சிறுமிகள்! - தேர்தல் விழிப்புணர்வு
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 100 விழுக்காடு வாக்குகளைப் பதிவுசெய்வதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அந்த அடிப்படையில், இன்று (மார்ச் 27) புதிய பேருந்து நிலைய வளாகத்தில், ஜவஹர் கலை இலக்கிய மன்ற சிறுவர் சிறுமிகள் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் சிலம்பாட்டம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கட்டைகள் ஆட்டம், பொய்க்கால் குதிரை என கிராமிய கலை நிகழ்ச்சிகள் அடங்கிய வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஏற்படுத்திய ராமநாதபுரம் தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத் துறை சிறுவர் சிறுமிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டினார். இந்நிகழ்வில் சார் ஆட்சியர் சுகபுத்ரா, துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.