விழுப்புரத்தில் ஆபத்தான நிலையில் நகருக்குள் வலம் வந்த டிராக்டர்! - villupuram district news
🎬 Watch Now: Feature Video
விழுப்புரம்-புதுச்சேரி சாலை வழியாக ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு விளை பொருட்களை ஏற்றிக் கொண்டு டிராக்டர் ஒன்று வந்தது. இதன் அனைத்து டயர்களும் பழுதான நிலையில், ஆபத்தான வகையில் விழுப்புரம் நகர பகுதிக்குள் சென்றது. இதனை ஆங்காங்கே பணியில் இருந்து போக்குவரத்து காவலர்களும் கண்டும், காணமல் இருந்தனர். இதனால் சாலையில் சென்ற பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனே கடந்து சென்றனர்.