உதகை தாவரவியல் பூங்கா - ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை - Plenty of tourists visit Udhaya Botanical Garden
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: உதகை தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்பட அனைத்துச் சுற்றுலாத் தலங்களும் இன்று காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். நேரம் குறைக்கப்பட்டது குறித்து தெரியாததால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காலை 8 மணி முதலே சுற்றுலாத் தலங்களுக்கு வந்தனர். இதனால் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கியச் சுற்றுலா மையங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இந்தப் பூங்காவிற்குள் செல்ல ஒவ்வொரு சுற்றுலாப் பயணியும் கட்டாயமாக இரண்டு தவணை கரோனா தடுப்பூசி சான்றிதழைக் காண்பிக்க வேண்டும்.