மலைகளின் அரசியை காண குவியும் சுற்றுலா பயணிகள்! - ஊட்டி
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: எழில் கொஞ்சும் இயற்கை அழகு, காண்போரை கவரும் மடிப்பு மலைகள், கட்டி இழுக்கும் பசுமை என சுற்றுலா பயணிகளை தன்னிடம் ஈர்த்து கொள்கிறாள் மலைகளின் அரசியான உதகை. சுற்றுலா பயணிகளின் எதிர்பார்ப்பை தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பூக்கள் பூர்த்தி செய்கின்றன. பூங்காவில் பூத்துள்ள பூக்களை ரசித்த சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா சிகரத்திற்கு சென்று தொலைநோக்கி மூலம் பல இயற்கை காட்சிகளையும் கண் குளிர கண்டு ரசிக்கின்றனர். ஊட்டியிலிருந்து முதுமலை சரணாலயத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள், யானை சவாரியும் செய்து வருகிறனர். வனத்துறை வாகனத்தில் வாகனச் சவாரி செய்வதன் மூலம் யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் போன்ற வனவிலங்குகளை கண்டும் மகிழ்ச்சி அடைகின்றனர். இதனால் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.