அலையில் சென்ற ஆமைக்குஞ்சுகள் - காணொலி - நீர் நில வாழ் உயிரினமான
🎬 Watch Now: Feature Video
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதியில் ஆமைகள் முட்டையிடும் சீசன் காலம் தொடங்கியது. ஆமை இனத்தைப் பாதுகாக்க சமூக ஆர்வலர்களும், வனத்துறையினரும் பலக் குழுக்களாக சென்று ஆமை முட்டைகளை சேகரித்து பொரிப்பகங்களில், பாதுகாத்து வருகின்றனர். இதனையடுத்து முதல் கட்டமாக இன்று ராஜாக்கமங்கலம் அருகே தென்பால் கடற்கரை பகுதியில் ஆமை குஞ்சுகள் முட்டைகளிலிருந்து வெளிவரத் தொடங்கியது. இதனையடுத்து வனத்துறையினர் ஆமைக் குஞ்சுகளை சேகரித்து அதனைக் கடலில் சுதந்திரமாக விட்டனர். அழிந்து வரும் நீர் நில வாழ் உயிரியான ஆமைகளைப் பாதுகாக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர், சமூக ஆர்வலர்களுக்கு பொதுமக்களிடையே பாராட்டுகள் குவிந்து வருகின்றன.