துலா உற்சவம்; அமாவாசை தீர்த்தவாரி... தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு - Nagapattinam district
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ்பெற்றதாகும். இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களிலிருந்தும் பக்தர்கள் வருகை புரிவர். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொள்வதே இதன் ஐதீகம். ஐப்பசி மாதம் அமாவாசை தினத்தில் கங்கைக்கு மாயூரநாதர் சுவாமிகளும், மேதா தட்சிணாமூர்த்தியும் காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது. இன்று(நவ.04) ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு மாயூரநாதர் ஆலயத்திலிருந்து வெள்ளி ரிஷப வாகனத்தில் மாயூரநாதர் சுவாமியும், வதான்யேஸ்வரர் ஆலயத்திலிருந்து வெள்ளி கைலாய வாகனத்தில் மேதாதட்சிணாமூர்த்தி சுவாமியும், முதலை வாகனத்தில் கங்கை அம்மனும் மற்றும் விசுவநாதர் ஆலயம், ஐயாறப்பர் ஆலயம் இவற்றிலிருந்து இறைவனும் அம்பாளுடன் காவிரிக்கரையின் இரண்டு கரைகளிலும் எழுந்தருளினர். பின்னர் அஸ்திரதேவருக்கு இரண்டு கரைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.