திருவாரூர் தொகுதி அதிமுக, திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் - Thiruvarur constituency AIADMK and DMK candidates filed nominations
🎬 Watch Now: Feature Video
திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளர்கள் நேற்று (மார்ச் 15) வேட்புமனு தாக்கல் செய்தனர். திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிடும் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம், திமுக சார்பில் போட்டியிடும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சியினருடன் வேட்பாளர் உட்பட 6 நபர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களை வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரான ராஜ ராஜேந்திரனிடம் வழங்கினர்.