'திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...' - நாளை திறப்பை ஒட்டி தயார்செய்யப்படும் திரையரங்குகள் - திருநெல்வேலி திரையரங்கம்
🎬 Watch Now: Feature Video
கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் 26ஆம் தேதிமுதல் திரையரங்குகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து நாளைமுதல் திரையரங்குகளில் 50 விழுக்காடு இருக்கைகளை பொதுமக்களுக்கு அனுமதிக்கலாம் என தமிழ்நாடு அரசு நேற்று (ஆக. 21) அறிவித்தது. இதனையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் சுமார் 20-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று காலையில் சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் அங்கு வரும் பொதுமக்களுக்கு திரையரங்குகளில் உடல் வெப்ப பரிசோதனை செய்யவும், கிருமிநாசினி வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.