தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் முறைப்படி அர்ச்சனை - Thanjai periya kovil
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: "அன்னை தமிழில் அர்ச்சனை" திட்டம் முதற்கட்டமாக 47 கோயில்களில் இன்று தொடங்கப்பட்டது. அதன்படி தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெருவுடையாருக்கு தமிழ் முறைப்படி இன்று அர்ச்சனைகள் நடைபெற்றன. இதற்கு வரவேற்பு தெரிவித்து பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். பெரிய கோயிலில் தமிழ் முறைப்படி மந்திரங்கள் முழங்க வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை இன்று நிறைவேறியது.