ஆற்றுப்பாலம் உடைந்து ஆர்ப்பரிக்கும் வெள்ளம்: துண்டிக்கப்பட்ட 20 கிராம மக்கள்
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் தனது முழுக் கொள்ளளவான 35 அடியில் 34.1 அடி கன அடியை எட்டியுள்ளது. இதனையடுத்து, 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டதால் மெய்யூர் ஆற்று தரைப்பாலம் உடைந்து, அதிகப்படியான நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனால் மெய்யூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 20 கிராம மக்கள் திருவள்ளூருக்கு செல்லமுடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று பூண்டி நீர்த்தேக்கம் நிரம்பி உபரி நீர் வெளியேற்றும் போதெல்லாம், தரைப்பாலம் உடைவதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த நிலையை மாற்றி புதிதாக கட்டப்படும் மேம்பாலத்தை துரிதமாக கட்டி முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.