சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளில் பரவலான மழை - விவசாயிகள் மகிழ்ச்சி! - rain in erode farmers express happiness
🎬 Watch Now: Feature Video

தமிழ்நாட்டில் வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி சுற்றுவட்டாரங்களில் காலை முதலே சாரல் மழை பெய்ய தொடங்கியது. சாரல் மழை அவ்வப்போது சற்று கனமழையாக மாறியதால் சத்தியமங்கலம், பவானிசாகர் பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. பவானிசாகர், சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தற்போது பெய்த மழை விவசாயத்துக்கு பேருதவியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.