விருதுநகர் தளவாய்புரத்தில் மூன்று கோயில்களில் அடுத்தடுத்து பூக்குழி திருவிழா! - விருதுநகர் தளவாய்புரத்தில் மூன்று கோவில்களில் அடுத்தடுத்து பூக்குழி திருவிழா
🎬 Watch Now: Feature Video
விருதுநகர்: ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் செட்டியார்பட்டி , கொம்மந்தபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மாரியம்மன், பத்திரகாளியம்மன், நடு மாரியம்மன் கோயில்களில், பத்து தினங்களாக பக்தர்கள் விரதம் இருந்து இன்று (ஏப்.14) அதிகாலை பூக்குழி இறங்கினர். முதல் கோயிலில் மூன்று மணிக்கும், இரண்டாவது கோயிலில் நான்கு மணிக்கும், மூன்றாவது கோயிலில் ஆறு மணிக்கும் அக்கோயில்களின் பூசாரிகள் பூக்குழி இறங்கினர்.
இந்நிலையில், சிவகாசி ,சிவகிரி, ராஜபாளையம், மாங்குடி, சேத்தூர், தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.