கருமத்தம்பட்டியில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய காவல்துறையினர்! - coimbatore police celebrating Equality Pongal
🎬 Watch Now: Feature Video

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல்துறை சார்பில் புனித ஜெபமாலை அன்னை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கருமத்தம்பட்டி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சூரியமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். காவல் துறையை சேர்ந்த பெண் காவலர்கள் புதுப்பானையில் பொங்கலிட்டு பொதுமக்களுக்கு வழங்கினர். முன்னதாக குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.