கோபியில் களைகட்டிய புறாப்போட்டி; இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு! - pigeon competition
🎬 Watch Now: Feature Video
கோபிசெட்டிபாளையம் நகர புறா வளர்ப்போர் சங்கத்தின் சார்பில் 47 வது ஆண்டாக சாதா புறா-கர்ணப்புறா கூட்டுப்போட்டி நடைபெற்றது. சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட புறா வளர்ப்பவர்கள் பந்தய புறாக்களுடன் கலந்து கொண்டனர். பறக்க விடப்படும் புறாக்களில் ஆறு மணி நேரத்திற்கு பின்பு தரையிறங்கும் புறா முதலியிடத்தையும், அதற்கு முன்னதாக கீழே இறங்கும் புறாக்கள் வரிசைப்படி இரண்டாவது மூன்றாவது இடங்களை பிடிக்கும். இப்போட்டியில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வதுடன் பங்கேற்றனர்.