சுனாமி நினைவு தினம்: அஞ்சலி செலுத்திய தரங்கம்பாடி மீனவ கிராம மக்கள்! - Tsunami news in Tamil
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10014534-thumbnail-3x2-ngp.jpg)
2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியால் ஏராளமானோர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் நினைவாக சுனாமி நினைவு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மீனவ கிராமங்களில் இன்று (டிச.26) 16ஆவது ஆண்டு சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் கடற்கரையிலிருந்து ஏராளமானோர் பேரணியாக புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக 315 பேர் அடக்கம் செய்யப்பட்ட பழைய ரயில்வே நிலையம் அருகே உள்ள நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Last Updated : Dec 26, 2020, 5:50 PM IST