தடுப்பூசி இருப்பு இல்லாததால் மக்கள் ஏமாற்றம்! - கோயம்புத்தூரில் கரோனா தடுப்பூசிகள் பற்றாக்க்குறை
🎬 Watch Now: Feature Video

கோயம்புத்தூரில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கோயம்புத்தூர் கலை கல்லூரியில் இயங்கிவரும் தடுப்பூசி மையத்தில் இன்று (மே 4) காலையிலேயே சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர்.
ஆனால், தடுப்பூசி முடிவடைந்துவிட்டது என அறிவிப்பு பலகை வைத்ததால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர். தடுப்பூசிகளின் இருப்பு குறித்து முன்னரே அறிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.