அருவியில் குளிக்க அனுமதி: மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்!
🎬 Watch Now: Feature Video
தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் சில தினங்களாக தொடர் சாரல் மழை பெய்து வந்ததன் காரணமாக அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால், மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கான தடை இரண்டு நாள்களாக நீட்டிக்கப்பட்டது. தற்போது அருவியில் நீர்வரத்து குறைந்ததன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மீண்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள், அருவி கரையோர வியாபாரிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.