பச்சை பசேலென காட்சியளிக்கும் நெல் வயல் வெளிகள்!
🎬 Watch Now: Feature Video
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதிகளில் உள்ள 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில், கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் முதல்போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதால், எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நெல் பயிர்கள் காட்சியளிக்கிறது.