மார்கதர்சி சிட் ஃபண்ட்: வனபர்த்தியில் கோலாகலமாகத் தொடங்கும் 116ஆவது கிளை! - RAMOJI MARGADARSI CHIT FUND
🎬 Watch Now: Feature Video
Published : Nov 16, 2024, 11:52 AM IST
|Updated : Nov 16, 2024, 12:35 PM IST
சிட் ஃபண்ட் துறையில் நம்பகத்தன்மையுடன் முன்னணி நிறுவனமான மார்கதர்சி சிட் ஃபண்ட் திகழ்கிறது. ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் சக்கரவர்த்தியாக இருந்த ‘ராமோஜி ராவ்’ பிறந்த நாளான இன்று, மார்கதர்சியின் 116ஆவது கிளை தெலங்கானாவின் வனபர்த்தியில் தொடங்கப்படுகிறது. இதன் வாயிலாக ‘மார்கதர்சி சிட் ஃபண்ட்’ தங்களின் நிதி சேவைகளை விரிவுபடுத்துகிறது. மார்கதர்சியின் நிர்வாக இயக்குநர் சைலஜா கிரண், வனபர்த்தி கிளையை ‘ராமோஜி பிலிம் சிட்டி’ வளாகத்தில் இருந்து தொடங்கி வைக்கிறார். ராமோஜி குழுமத்தின் முதன்மை நிறுவனமான ‘மார்கதர்சி’, 1962-ஆம் ஆண்டு முதல் கூட்டுறவு நிதிச் சேவைகளில் முன்னோடியாக இருந்து வருகிறது. ஆந்திரா, தெலங்கானா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முழுவதும் கிளைகளைக் கொண்டு, வலுவான நிதி சேவை வழங்கும் நிறுவனமாக, அதன் பாரம்பரியத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் நிதி அதிகாரம் போன்றவற்றை முதன்மைப் பண்புகளாகக் கொண்டு ‘மார்கதர்சி சிட் ஃபண்ட்’ செயல்பட்டு வருகிறது. வனபர்த்தி கிளை வாயிலாக, பயனர்கள் வீடுகளின் அருகே நிதி சேவைகளை அளிப்பதில் மார்கதர்சி பெருமை கொண்டுள்ளது. மேலும், இதை மற்றொரு மைல்கல்லாகவும் நிறுவனம் பதிவு செய்துள்ளது.
Last Updated : Nov 16, 2024, 12:35 PM IST