கடல் போல காட்சியளிக்கும் ஒகேனக்கல் அருவி - Okenakkal Falls
🎬 Watch Now: Feature Video
கர்நாடகவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் 80 ஆயிரம் கனஅடி ந வெளியேற்றப்பட்டு ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. நான்கு நாட்களில், ஒகேனக்கலுக்கான நீர்வரத்து 28,000 கன அடியிலிருந்து தொடங்கி படிப்படியாக அதிகரித்து இன்று 80 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து உயர்ந்ததன் காரணமாக ஒகேனக்கல்லில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் வழியில் தண்ணீர் அதிகம் இருப்பதால் கடல் போல காட்சியளிக்கிறது.