44 ரன்கள் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மேன்... கிரிக்கெட் விளையாடி அதிரடி காட்டிய எம்எல்ஏ! - நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
🎬 Watch Now: Feature Video
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் அதிமுக சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் பாஸ்கர் கலந்துகொண்டு போட்டியை தொடங்கிவைத்தார். அதன் பின்னர் அவர் கிரிக்கெட் மட்டையுடன் திடீரென கிரிக்கெட் விளையாடத் தொடங்கினார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உற்சாகமாக கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து விளையாடிய எம்.எல்.ஏ.., 44 ரன்கள் எடுத்து தொடர்ந்து களத்தில் இருந்தார். இதனையடுத்து வீரர்கள் கிரிக்கெட் விளையாடினர். போட்டியில் வெற்றிப்பெற்ற அணிக்கு எம்எல்ஏ பாஸ்கர் கோப்பைகளை வழங்கி கெளரவித்தார்.