கொஞ்சி விளையாடும் குரங்குக் குட்டியின் சேட்டைகள்: காண்போரைக் கவரும் காட்சிகள்! - கொஞ்சி விளையாடும் குரங்கு குட்டி
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: சீர்காழி தைக்கால் கிராமத்திலுள்ள மேலவல்லம் தெருவில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோட்டத்தை விட்டுப் பிரிந்த குட்டிக் குரங்கு ஒன்று சுற்றித்திரிந்து வருகிறது. தன் கூட்டத்தைப் பிரிந்து மரங்களிலே வசிக்கத் தொடங்கிய இந்த குட்டிக் குரங்கிற்கு அப்பகுதி மக்கள் பழங்கள், பிஸ்கட்டுகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இதனால் மரத்தை விட்டு இறங்கி கிராம மக்களிடம் நெருங்கிப் பழகத் தொடங்கியது இந்த குரங்குக் குட்டி, தற்போது சிறுவர்களுடன் கொஞ்சி விளையாடி வருகிறது. நேற்று (ஜூலை.07) மேலவல்லம் பகுதியைச் சேர்ந்த சிறுவன் விஜய் மீது ஏறிக் கொஞ்சி விளையாடிய குரங்குக் குட்டியின் சேட்டைகளை அப்பகுதி இளைஞர்கள் படம்பிடித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இக்காட்சி காண்போரைக் கவர்ந்து வருகிறது.