மாயமான ரயில்வே ஊழியர் ஏரியிலிருந்து உயிருடன் மீட்பு - திருவள்ளூர் ரயில்வே ஊழியர் மீட்பு
🎬 Watch Now: Feature Video
திருவள்ளூர் அடுத்த பெருமாள்பட்டு வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் வீரராகவன். இவர் கடந்த 28ஆம் தேதி காணாமல்போனார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்நிலையில் பெருமாள்பட்டு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரியில் உயிருக்குப் போராடிய ரயில்வே ஊழியரை காவல் துறையினர் பத்திரமாக மீட்டனர். சுமார் 40 மணி நேரத்திற்கும் மேலாக ஏரியில் உயிருக்குப் போராடிய ரயில்வே ஊழியரை மீட்ட செவ்வாப்பேட்டை காவல் துறையினரை அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் பாராட்டியுள்ளார்.