ஆந்திராவில் இருந்து எம் சாண்ட் கடத்தி வந்த இரண்டு லாரிகள் பறிமுதல்! - ஆந்திர மாநிலம்
🎬 Watch Now: Feature Video

திருவள்ளூர்: கவரப்பேட்டை பகுதியில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலத்திலிருந்து எம் சாண்ட் மணலை உரிய அனுமதியின்றி கடத்திவந்த 2 லாரிகளை வாகன சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், லாரி ஓட்டுனர்கள் விமல் ராஜ்(25), சத்யா (23) ஆகிய இருவர் மீது கவரைப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.