நீலகிரியில் பூத்த குறிஞ்சி மலர்...மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்! - Nilgiris District News
🎬 Watch Now: Feature Video
நீலகிரி: மலை மாவட்டமான நீலகிரியில் சுமார் ஒன்பது வகையான குறிஞ்சி மலர் செடிகள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் பூக்க கூடிய சாதாரண குறிஞ்சி முதல் 12 ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்க கூடிய அரிய வகை குறிஞ்சி மலர்களும் உள்ளன. இந்நிலையில், உதகையிலிருந்து கூடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்டவை ஆகும். கூடலுார் தேசிய நெடுஞ்சாலையில் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குவதை சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.