ETV Bharat / state

"234 சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மாவட்டச் செயலாளர்" - திருமாவளவன் தேர்தல் வியூகம் என்ன? - THIRUMAVALAVAN

அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பதை பதிப்பகம் தான் அறிவிக்க வேண்டும். ஆனால் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென சிலர் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன்
திருமாவளவன் (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 9, 2024, 10:24 PM IST

சென்னை : சென்னை தியாகராய நகரில் உள்ள அரங்கில் 'இந்தியன் வங்கி பட்டியல் மற்றும் பழங்குடியின ஊழியர் சங்கத்தின் பொது மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,"கடந்த 2011ம் ஆண்டிலேயே எங்களது கட்சி நிர்வாக அமைப்பை மாற்றி அமைக்க முடிவு செய்தோம். அதன்படி, தற்போது 234 சட்டமன்றத் தொகுதியையும் தனித்தனி மாவட்டங்களாக அறிவித்து தேர்தல் பணியாற்ற உள்ளோம். பதவிக்காக 234 மாவட்டச் செயலாளர்களை நியமிக்கவில்லை. கட்சியை வலுப்படுத்தவும், கிராமங்களை அதிகம் சென்று சேரவும் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பதை பதிப்பகம் தான் அறிவிக்க வேண்டும். ஆனால் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென சிலர், பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். புத்தக வெளியீட்டு விழாவிற்கு இன்னும் ஒரு மாதம் இருக்கின்றது. ஆனால் ஓராண்டுக்கு முன்பே நான் இசைவளித்து விட்டேன்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு (Credit - ETV Bharat Tamil Nadu)

நான் இசைவளித்தபோது தமிழக முதலமைச்சர் புத்தகத்தை வெளியிட இருப்பதாகவும், ராகுல் காந்திக்கு புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க இருப்பதாகவும் பதிப்பகத்தார்கள் கூறி இருந்தனர்" என தெரிவித்தார்.

முன்னதாக மேடையில் உரையாற்றிய அவர், ''அரசியலமைப்புச் சட்டம் நெருக்கடியில் உள்ளது. பிற நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து மாறுபட்டது இந்திய அரசியலமைப்பு. மற்ற நாடுகளில் இருக்கும் அரசியலமைப்பு மதச் சார்பின்மையை கொள்கை அளவில் மட்டுமே ஏற்றுள்ளது. நம் அரசியலைப்பு சட்டம் மட்டுமே மதச்சார்பின்மையை நடைமுறைப்படுத்தும் வலிமையைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: விசிகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்.. அனுமதி கோரி பாமக மனு.. காவல் துறையின் முடிவு என்ன?

அது நடைமுறையில் இருந்தால்தான் அரசியலமைப்பு உயிர்ப்புடன் இருக்கும். அரச மதம் என்று ஒன்று மற்ற நாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இசுலாம், இலங்கையில் புத்தமதம் என அனைத்து நாடுகளில் அரச மதம் உண்டு. ஆனால் நம் நாட்டில் அரச மதம் என எந்த மதமும் இல்லை.

லாஜிக்கலாக பார்த்தால் அது தவறாக இருப்பதாகத் தெரியும். பெரும்பான்மை மதமான இந்து மதத்தை ஏன் அரச மதமாக அங்கீகரிக்கவில்லை என்ற கேள்வி எழும். ஆனால் சமூக, கலாச்சார, அரசியல் ரீதியாக நம்முடைய இந்தியாவில் அரச மதம் எனும் நடைமுறை பொருந்தாது. இந்தியாவிலும் அரச மதம் வேண்டும் என்கின்றனர் சிலர்.

யார் வேண்டுமானாலும் எந்த மதத்தையும் பின்பற்றலாம். மத்திய அரசு ஒரு மதத்தைச் சார்ந்து இருக்கக் கூடாது என்பது அரசியலமைப்பின் நுட்பமான ஒரு புள்ளி. இதற்கான அரசியல் யுத்தம் தான் இந்தியாவில் நடக்கிறது. அதை மாற்றத்தான் முயற்சிக்கின்றனர். சமூக நீதி என்பது வெறும் இட ஒதுக்கீடு அல்ல. சமத்துவம் இருக்க வேண்டும். அனைவரும் முன்னேற வேண்டும் என்பதுதான் சமூக நீதி.

அனைத்து பொதுத்துறையும் தனியார்மயமாக்கப்படுகிறது. தனியார்மயமாக்கம் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. அதிகாரத்தில் இருப்போரிடம்தான் இந்த விழிப்புணர்வு கருத்தை பரப்ப முடியும். படிப்பறிவு அற்றவர்பளுக்கு புரிய வைக்க முடியாது. 'ஒயிட் காலர்ஸ்' களான நாம்தான் அதை பரப்ப வேண்டும். நாம்தான் அதை காப்பதற்கான படை வீரர்கள். அரசியலமைப்பை அனைத்து வீடுகளிலும் வைக்க வேண்டும் திருமணங்களில் அதை உறுதிமொழியாக ஏற்க வேண்டும்'' என்று பேசினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.