மலர் கண்காட்சி ரத்து: மழையால் அழுகும் பூக்கள் - kodaikanal flower show flowers rotten on rain
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தோட்டக்கலை துறைக்குச் சொந்தமான 'பிரையண்ட்' பூங்கா அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி, அதனை தொடர்ந்து கோடை விழாவும் நடைபெறும்.
கடந்தாண்டு கரோனா தொற்று காரணமாக, மலர் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று இந்தாண்டும் கரோனா இரண்டாம் அலையின் காரணமாக, சுற்றுலாத் தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகைக்காக தயார்படுத்தப்பட்ட பிரையண்ட் பூங்காவில் பல்வேறு வண்ணங்களில் பல்வேறு வகையிலான பூக்கள் பூத்து குலுங்குகின்றன. தற்போது கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் பூக்கள் அனைத்தும் அழுகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
TAGGED:
கொடைக்கானல் மலர் கண்காட்சி