மாநில அளவிலான கபடி போட்டி: வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யும் பணி தொடக்கம் - மாநில அளவிலான கபடி போட்டி
🎬 Watch Now: Feature Video
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் ஜூனியர் ஆண்களுக்கான மாநில அளவிலான கபடி போட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் பிப்ரவரி 19, 20, 21 தேதிகளில் நடைபெற உள்ளது. அதேபோல் ஜூனியர் பெண்களுக்கான கபடி போட்டி சென்னையில் பிப்ரவரி 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்காக பெரம்பலூர் மாவட்ட வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யும் போட்டி நடைபெற்றது. இங்கு தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவில் நடைபெறும் கபடி போட்டியில் விளையாட தகுதி பெறுவர்.