மாவட்டத்தை பிரிக்க எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு: 50 சதவிகிதம் கடை திறப்பு!
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாக பிரிப்பதற்கு வர்த்தக சங்கம் எதிர்ப்பு தெரிவித்து இன்று கடையடைப்பு போராட்டம் அறிவித்தனர். இந்நிலையில் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடாமல் திறக்கப்பட்டிருந்தன. இதில் ரயில்வே சாலை ராஜாஜி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், உணவகங்கள் என அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து கடைகளும் திறந்திருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கவில்லை.