சென்னை: சென்னை கொரட்டூரில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரியை சேர்ந்த ஓவியர் ஆர்.சிவராமன் தலைமையில் 100 ஓவிய மாணரவர்களை ஒன்றிணைந்து கைரேகையால் உதயநிதி ஸ்டாலின் உருவத்தை வரையும் உலக சாதனை நிகழ்ச்சி நேற்று (நவம்பர்.24) நடைபெற்றது.
இந்த நிகழ்வை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு, உலக சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்தி சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.
சென்னை - கொரட்டூர், மூகாம்பிகை நகர், இன்ஃபினைட் டர்ஃப் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்ற மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.@Udhaystalin அவர்களின் பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டேன். நிகழ்வின் போது, 100 மாணவர்கள் ஒன்றிணைந்து, வெறும் 3 மணி நேரத்தில் 5,000 சதுர அடியில் (1/2) pic.twitter.com/XwMRp6TH3F
— P.K. Sekar Babu (@PKSekarbabu) November 24, 2024
இதையும் படிங்க: கலகலப்பு படபாணியில் 5 சால்வையை 50 தூய்மை பணியாளர்களுக்கு மாறி மாறி போர்த்திய அவலம்!-ஊரக வளர்ச்சிதுறை நடவடிக்கை பாயுமா?
5000 சதுர அடி கேன்வாஸில் 100 ஓவிய மாணவர்கள் தனது கட்டை விரல் ரேகை பயன்படுத்தி ரோலகஸ் பெயிண்ட் மூலம் தங்களது கைரேகை பதிவு செய்தனர். 100 மாணவர்களிட்ம், சுமார் 50 லட்சம் கைரேகை (thumb print) பதிவு செய்து, உதயநிதி ஸ்டாலின் ஓவியத்தை வரைந்துள்ளனர். 6 மணி நேரம் வரைந்த இந்த ஓவியம் உலகிலேயே மிகப்பெரிய ஓவியமாக (Unico) யூனிக்கோ உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்