சென்னை: சர்வதேச அளவிலான தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி சென்னை செங்குன்றத்தை சேர்ந்த மாரியப்பன், பலரிடம் பணம் பெற்று தேச விரோத செயல்களுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டும் செயல்களில் ஈடுப்பட்டு வருவதாக சாந்தி குமாரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், சர்வதேச அளவில் தொழில்களில் முதலீடு செய்வதாக கூறி தன்னிடமும், பணம் பெற்ற மாரியப்பன், பெங்களூரை சேர்ந்த ரியாஷ் அகமது, மும்பையை சேர்ந்த முகமது அமீர் ஆகியோர் தமிழகத்தின் மண்ணடியை சேர்ந்த முகமது அன்சர் மூலம் சட்டவிரோத செயல்களுக்கு பணம் ஈட்டி, அளித்திருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுமா? உயர் நீதிமன்றத்தில் தலைமைத் தேர்தல் ஆணையம் பரபரப்பு பதில்!
இது தொடர்பாக செங்குன்றம் காவல்நிலையம் தேசிய புலானாய்வு முகமைக்கு புகார் அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை என குறிப்பிட்டுள்ளார். அதனால், தன்னுடைய புகார் மனு மீது விசாரணை நடத்தி, தேசிய புலானாய்வு குழு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதி வேல்முருகன், வழக்கு தொடர்பாக தேசிய புலானய்வு முகமை, செங்குன்றம் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 19ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்