திருவாரூரில் கனமழை: பொதுமக்கள் மகிழ்ச்சி - Heavy rain in Thiruvarur
🎬 Watch Now: Feature Video
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று (நவ.29) மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுப்பெற்று டிசம்பர் இரண்டாம் தேதி தமிழ்நாட்டை நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இதன் காரணமாக திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் திடீரென திருவாரூர் நகர் பகுதி, நன்னிலம், பேரளம், கொல்லுமாங்குடி உள்ளிட்ட அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் சம்பா, தாளடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.