ராமநாதபுரம் அருகே கரை ஒதுங்கிய ராட்சத திமிங்கலம்...! - ராட்சத திமிங்கலம்
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம்: உச்சிப்புளி அருகே கடற்கரை பகுதியில் ராட்சத திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், வனவர் சந்துரு ராஜா, வனக்காப்பாளர் குணசேகரன், வேட்டைத் தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர், திமிங்கிலத்தை ஆய்வு செய்தனர். அதில், திமிங்கலத்தின் வயது 7 முதல் 9 வரை இருக்கும் என்றும், 3 டன் எடை, 9 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலம் கொண்டது என்று வன அலுவலர்கள் தெரிவித்தனர். மேலும், இயற்கை சீற்றத்தால் இறந்திருக்கலாம் என்றும், உடற்கூராய்வுக்கு பிறகே முழு விவரம் தெரியவரும் என்றனர்.