ETV Bharat / state

நீலகிரியில் அட்டகாசம் செய்து வந்த கரடி; கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்! - BEAR WAS CAUGHT IN CAGE

நீலகிரி மாவட்டத்தின் நகர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர்.

கூண்டில் பிடிபட்ட கரடி
கூண்டில் பிடிபட்ட கரடி (ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 12, 2025, 10:21 PM IST

Updated : Jan 12, 2025, 11:09 PM IST

நீலகிரி: உதகை அருகே உள்ள மஞ்சூர் எடக்காடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடியை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்துள்ளனர். தொடர்ந்து பிடிப்பட்ட கரடியை வனத்துறையினர் முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் 65 சதவீதம் வனப்பகுதியை கொண்டதாகும். இப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, சிறுத்தை, புலி, கரடி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக உணவு மற்றும் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் ஊருக்குள் புகுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, அவ்வப்போது மனித வனவிலங்கு மோதல் ஏற்படுகிறது. அவ்வாறு வரும் வன விலங்குகள் சில நேரங்களில் அப்பகுதி மக்களை தாக்குவதால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

கரடியை பிடித்து வனப்பகுதியில் விடுவித்த வீடீயோ காட்சி (ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையில், சமீப காலமாக மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் இரவு நேரங்களில் நடமாடி வந்த கரடி ஒன்று, அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ காட்சிகளும் வெளியாகி கடந்த சில நாட்களாக வைரலாகியது.

இதையும் படிங்க: கரடி தாக்கி உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரர்: ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கிய தமிழக அரசு!

இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் கௌதம் அறிவுறுத்தலின்படி, குந்தா வனச்சரகர் சீனிவாசன் தலைமையில், வனத்துறையினர் எடக்காடு சத்தியமூர்த்தி நகர் பகுதியில் கூண்டு வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு அட்டகாசம் செய்து வந்த கரடி கூண்டில் சிக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், கரடியை மீட்டு, பிக்கப் வாகனம் மூலம் ஏற்றி சென்று முதுமலை புலிகள் காப்பகம் அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விடுவித்துள்ளனர். எடக்காடு பகுதியில் அட்டகாசம் செய்து வந்த கரடி சிக்கியதால் சத்தியமூர்த்தி நகர் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Last Updated : Jan 12, 2025, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.