சென்னை: துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் தலைமையிலான அணி மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த நிலையில், இந்த வெற்றிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையில் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வரும் அஜித்குமார், ‘அஜித்குமார் ரேசிங்' என்ற பெயரில் தமது தலைமையில் ஓர் அணியையும் உருவாக்கியுள்ளார். இந்த அணி துபாயில் நடைபெற்ற 24H Dubai 2025 சர்வதேச கார் பந்தயத்தில் பங்கேற்று தற்போது மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இது குறித்த வீடிடோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வெற்றியை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் அஜித் குமாரின் இந்த வெற்றிக்கு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், "துபாயில் நடந்த 24H 991 பிரிவு ரேஸில் அஜித்குமார் மற்றும் அவரது அணி 3வது இடத்தை பிடித்துள்ளதை கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அஜித்குமார் மற்றும் அவரது அணியினரின் சாதனைக்கு எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
I am thrilled to hear that Ajith Kumar Sir and his team have secured third place in the 991 category at the 24H Dubai 2025.
— Udhay (@Udhaystalin) January 12, 2025
I extend my heartfelt congratulations to #AjithKumar Sir and his team for this remarkable achievement.
I thank @Akracingoffl for displaying our… pic.twitter.com/udtcaSASqE
இதையும் படிங்க: துபாய் கார் பந்தயத்தில் மூன்றாம் இடம் பிடித்து அசத்திய அஜித்! ரசிகர்கள் பெருமிதம்
இந்த பந்தயத்தில் திராவிட மாடல் அரசின் தமிழக விளையாட்டுதுறை லோகோவை(SportsTN) பயன்டுத்தியதற்காக அஜித்குமார் ரேஸிங் அணிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அஜித்குமார் இதுபோல் தொடர்ந்து வெற்றி பெற்று நம் நாட்டுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில், "துபாய் 24H தொடரில் 991 பிரிவு கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் அணி 3ம் இடம் பிடித்துள்ளது இந்தியாவுக்கு பெருமையான தருணமாக உள்ளது. அஜித் குமார் தான் பங்கேற்கும் துறைகளில் தனித்துவத்துடன் சிறந்து விளங்குகிறார். அஜித் குமார் தனது ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வால் மற்றவர்களை ஊக்குவித்து வருகிறார்" இவ்வாறு கூறியுள்ளார்.
Moment of pride for India as Shri Ajith Kumar avl secured 3rd place in the 991 category and Spirit of the Race in the GT4 category in the Dubai 24H Series.
— K.Annamalai (@annamalai_k) January 12, 2025
Shri Ajith Kumar avl is remarkable, excelling with distinction in every role he takes on and inspiring countless others… pic.twitter.com/dclsvukUeg
மேலும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில், "அஜித் குமார் அணியினர் முதல் பந்தயத்திலேயே அசாதாரண சாதனை படைத்துள்ளனர். பன்முகத்தன்மை கொண்ட ஆர்வங்களில் எல்லைகளைத் தாண்டிச் செல்லும் எனது நண்பர் அஜித்தை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய (motorsports) விளையாட்டுகளுக்கு இது ஒரு பெருமைமிக்க தருணம்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Extraordinary achievement by Team #AjithKumarRacing in their maiden race! Thrilled for my friend Ajith, who continues to push boundaries in his diverse passions. A proud and seminal moment for Indian motorsports. pic.twitter.com/DsuCJk4FFB
— Kamal Haasan (@ikamalhaasan) January 12, 2025