காந்தி சிலைக்கு மாலை அணிவித்த மாவட்ட ஆட்சியர்! - Plastic Awareness
🎬 Watch Now: Feature Video
வேலூர்: காந்தியடிகளின் 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் கோட்டையில் உள்ள காந்தி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். அதன்பிறகு வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் நெகிழி ஒழிப்பு மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் தூய்மை பணியில் துப்புரவு பணியாளர்கள் திரளாக பங்கேற்று விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். பின்னர் பேருந்து நிலையங்களில் இருந்த உணவகங்கள், கடைகள் என ஒவ்வொரு கடையாக துண்டு பிரசுரங்களை வழங்கி நெகிழி ஒழிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.