கனமழையால் விவசாயிகள் பாதிப்பு - Farmers affected by heavy rains
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துவருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்துவருகிறது. நேற்றிரவு (ஆக. 17) பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக உள்ள குறுவை பயிர்கள், வயலில் சாய்ந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தொடர் மழை பெய்தால் நிலத்தில் சாய்ந்த பயிர்கள் முளைத்துவிடும் என்பதால் விவசாயிகளின் கவலை அதிகரித்துள்ளது.