வாக்குச்சாவடிகளைத் தேர்தல் அலுவலர் பார்வை! - election news
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் வாக்குச் சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். இதனைத் தொடர்ந்து பழனி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட கொடைக்கானலில், நகர் பகுதி மட்டுமின்றி கிராமப் பகுதிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடிகளைப் பொதுத்தேர்தல் பார்வையாளர் பூபேந்திரசிங் (IAS) பார்வையிட்டு, ஆய்வுமேற்கொண்டார். இதைத்தொடர்ந்து அலுவலர்களுக்குத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார்.